என் அரசு

என் அரசு

ான் பசினு கேக்கர முன்னாடி சோறு போடும்; ஊரு வித்து ஊரு வந்து பொழைக்க போரேன்னு சொன்னா ஊருக்கே வந்து பொழப்ப கொடுக்கும்;

ஊரு கிராமம் பிரசவத்துக்கும் ஒடம்பு நோவுக்கும் பத்து மைல் தூரம் போரேன்னு சொன்னா ஊரு தேடி ஆசுபத்திரி வரும் டாக்டரோட சேத்து மருந்தும் வரும்;

படிக்க பள்ளிக்கோடம் இல்லை பள்ளிக்கோடம் போன சோத்துக்கு வழியில்லனு சொன்னா பள்ளிக்கோடமும், புஸ்தகமும், சோத்தோட சேந்து வரும், நா படிச்சா போதும்னு;

சோத்துக்கு வழியில்ல என்ன செய்யனு தெரியல, கவலைய வுடு உன்ற சோத்துக்கு நான் வழி சொல்றேனு, இலவசமா சோத்த மட்டும் போடாம, சோத்துக்கு தேவையான பொழப்பும் தரும்;

வெவசாயத்துக்கு தண்ணி இல்லனு சொன்னா, கொளவெட்டி கம்மாய் பரிச்சு வந்த மழையெல்லாம் புடுச்சி மூனு போகம் வெளைக்க போக மாடு கன்னுக்கும் கொரவில்லாம தண்ணி தரும்;

படாதபாடுபட்டு கடலா வந்த வேர்வைய பாய்ச்சி வெளச்ச பயிருக்கு மொதலாளி சரியா காசு தரலைனா வெளச்சலுக்கு சரியான காசு கொடுத்து வங்குனது மட்டும் இல்லாம மொதலாளியையும் சரியா வாங்க வைக்கும்;

படிச்ச படிப்புக்கு உள்னாட்டுல வேலை இல்ல நா வெளினாட்டுக்கு போரேன்னு சொன்னா, நீ ஏன் அங்க போய் யெவனுக்கோ ஒழைக்கர உனக்கு நம்ம நாட்லயே வேலைய நாந்தாரன்னு மட்டும் சொல்லாம அத தொடர்ந்து செய்ய வழியும் சொல்லித்தரும்;

இப்பிடி நாங்கண்ட கனவெல்லாம் கனவாவே போயுடுமோ? இல்ல அத இந்த சென்மத்துல நனவாக்க வழியாச்சும் கெடச்சிடுமோ?

updatedupdated2023-05-262023-05-26