காவு

காவு

வள பாத்த வொடனே போய் சொன்ன; அடியே! உண்ண எனக்கு புடிச்சிருக்கு, கட்டிக்கோனு; அவ சொன்னா, எனக்கும் உண்ண புடிச்சிருக்கு ஆனா கட்டிக்கிர முன்னாடி எனக்கொரு ஓசந்த காவு கொடுனு!

அவ கேட்ட காவுக்காக அந்த கடல வடிச்சு, அதுல இருந்து ஒரு முத்தெடுத்து கொடுத்தேன், வேணாம்னுட்டா! அந்த வானத்துல இருக்கும் பெளர்னமி நெலவக் களவாடி, வானவில்ட இருக்குர நெரத்த புடிங்கி அடிச்சு குடுத்தேன், போதாதுனுட்டா!

பொறவு என்னத்த கொண்டாறனு கேட்டதுக்கு, கேட்ட ஓடனே கடல வடிச்சு முத்தெடுக்க ஓடுச்சே அந்த மனச மட்டும் கொடுனு! கொடுத்துபுட்டேன்; ஆன அந்த சண்டாளி இப்போ அவளையே உரிச்சுவச்சி ஒருத்திய பெத்து போட்டு இருக்கா, இப்போ அவ வந்து கேக்கா

எனக்கு என்ன காவு தர போரேனு !!!

updatedupdated2023-05-262023-05-26